நாவில் எச்சில் ஊறவைக்கும் நெய் மைசூர்பாகு செய்வோமா?

தேவையான பொருட்கள் : கடலை மாவு – 100 கிராம்,

தேவையான பொருட்கள் : சர்க்கரை – 300 கிராம்,

தேவையான பொருட்கள் : நெய் – 200 கிராம்

செய்முறை: அடிகனமான இரும்பு கடாயில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடு படுத்தி கொள்ளவும்.

செய்முறை: சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்து விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

செய்முறை: கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போட்டால் மைசூர் பாகு ரெடி.