குழந்தைகளுக்கு பிடித்தமான மேகி ஸ்னாக்ஸ்!
தேவையான பொருள்கள்:- மேகி –140 கிராம்,
தேவையான பொருள்கள்:- வெங்காயம் – தேவையான அளவு
தேவையான பொருள்கள்:- பச்சை மிளகாய் – தலா ஒன்று,
தேவையான பொருள்கள்:- கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு,
தேவையான பொருள்கள்:- இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,
தேவையான பொருள்கள்:- கரம் மசாலா- தேவையான அளவு,
தேவையான பொருள்கள்:- வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்,
தேவையான பொருள்கள்:- சீஸ் – ஒரு கியூப்,
தேவையான பொருள்கள்:- கேரட் – ஒன்று,
தேவையான பொருள்கள்:- மைதா மாவு – 2 டீஸ்பூன்.
செய்முறை:- முதலில் மேகியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு அது வெந்ததும் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
செய்முறை:- வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். சீஸ் மற்றும் கேரட்டைத் நன்றாக துருவி எடுத்துக்கொள்ளவும் .
செய்முறை:- மைதா மாவைத் தண்ணீரில் கரைத்து வைக்கவும். மீதி மேகியைப் பொடி பொடியாக மாற்றி கொள்ளவும்.
செய்முறை:- வேகவைத்த மேகி ஆறியதும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கொத்தமல்லித்தழை, இஞ்சி – பூண்டு, வெண்ணெய், சீஸ், கரம் மசாலா சேர்த்து நன்றாகப் பிசையவும்.
செய்முறை:- எண்ணெய் தடவிய ஒரு தட்டில் இதைப் பரப்பி குறைந்தது 30 நிமிடங்கள் குளிர வைக்கவும். 30 நிமிடத்திற்க்கு பிறகு எடுத்து இதைச் சதுர துண்டுகளாக அல்லது வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
செய்முறை:- இதை மைதா கரைசலில் முக்கியெடுத்து, பொடி பொடியாக மாற்றி வைத்துள்ள மேகியில் புரட்டவும். சூடான எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.