கோடை காலத்திற்கு ஏற்ற குளு குளு கம்மங்கூழ்!!

தேவையானவை: கம்பு – 1 கப்

தேவையானவை: அரிசி – கால் கப்

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: தயிர் – 1 கப்

செய்முறை: 1.   அரிசியை ஒன்றிரண்டாக இருப்பதுபோல் பொடித்துக் கொள்ளவும். கம்பை சுத்தம் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து காயவைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை: 2.   அடுத்து இந்த கம்பு மாவுடன் தண்ணீர் சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

செய்முறை: 3.   அடுத்து ஒரு பாத்திரத்தி நீர் ஊற்றி கொதிக்கும்போது அரிசியைப் போட்டு வேகவிட்டு அடுத்து கம்பு மாவை சேர்த்து கிளறி வேகவிடவும்.

செய்முறை: 4.    கம்பு வெந்தபின்னர் ஒரு நாள்விட்டு அடுத்தநாள் உப்பு, தயிர் சேர்த்துக் கலந்தால் கம்பங்கூழ் ரெடி.