குழந்தைகளுக்குப் பிடித்தமான கொங்குநாடு தால் ரெசிபி!
தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1 கப்
தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: எண்ணெய் – 3 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: வெங்காயம் – 2
தேவையான பொருட்கள்: பூண்டு – 5 பல்
தேவையான பொருட்கள்: கடுகு –1/2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: சீரகம் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – சிறிதளவு
தேவையான பொருட்கள்: நெய் – 4 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை: முதலில் துவரம் பருப்பு சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள், எண்ணெய் , தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.
செய்முறை: அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
செய்முறை: பின் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
செய்முறை: பிறகு பருப்பை லேசாக மசித்து பின் வாணலியில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.