ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் ரெசிப்பி!

தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் – 3

தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1/3 கப்

தேவையான பொருட்கள்: புளி – சிறிதளவு

தேவையான பொருட்கள்: சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்

தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

தேவையான பொருட்கள்: உப்பு – தேவைக்கு ஏற்ப

தேவையான பொருட்கள்: எண்ணெய் – 2 1/2 டீஸ்பூன்

தேவையான பொருட்கள்: கடுகு – 1 டீஸ்பூன்

தேவையான பொருட்கள்: சீரகம் –1/4 டீஸ்பூன்

தேவையான பொருட்கள்: வெந்தயம் –1/2 டீஸ்பூன்

தேவையான பொருட்கள்: பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – சிறிது

செய்முறை: முதலில் துவரம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் புளியை 1 கப் சுடுநீரில் ஊற வைத்து, கட்டியாக சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை: பின் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள்,சீரகம் சிறிது சேர்த்து மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கி, நன்கு மசித்து வைத்து கொள்ளவும்.

செய்முறை: பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை: பின் அதில் முருங்கைக்காயைப் போட்டு, 1 நிமிடம் வதக்கி, பின் அதில் சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு, மஞ்சுள் தூள் சிறிது சேர்த்து 1 நிமிடம் கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, முருங்கைக்காயை வேக வைக்க வேண்டும்.

செய்முறை: முருங்கைக்காயானது வெந்ததும், 1 கப் புளிச்சாறு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.

செய்முறை: இறுதியில் அதில் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 5-6 நிமிடம் மிதமான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் ரெடி..