ஹோட்டல் ருசியில் வீட்டில் எளிமையாக குஸ்கா செய்வது எப்படி?
தேவையான பொருள்கள் பாசுமதி அரிசி – 300 கி
தேவையான பொருள்கள் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருள்கள் நெய் – 3 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருள்கள் பட்டை - தேவைக்கு,
தேவையான பொருள்கள் ஏலக்காய் - தேவைக்கு,
தேவையான பொருள்கள் கிராம்பு- தேவைக்கு,
தேவையான பொருள்கள் பிரியாணி இலை – தேவைக்கு
தேவையான பொருள்கள் பச்சை மிளகாய் – 4
தேவையான பொருள்கள் உப்பு – தேவைக்கு
தேவையான பொருள்கள் இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருள்கள் புதினா - தேவைக்கு,
தேவையான பொருள்கள் மல்லி தழை – தேவைக்கு
தேவையான பொருள்கள் காஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு சிட்டிகை
தேவையான பொருள்கள் மிளகாய்த் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
செய்வது எப்படி? பாசுமதி அரிசியை நல்லா கழுவி விட்டு 20 நிமிடத்துக்கு ஊற விடுங்க. அப்போ தான் நாம செய்யும் போது அரிசி உடையாம நீளமாக வரும். குக்கரை அடுப்பில் வைத்து நல்லா சூடானதும் 3 டேபிள் ஸ்பூன் பாமாயில் ஊற்றிக் காயவிடுங்க.
செய்வது எப்படி? 3 டேபிள் ஸ்பூன் நெய் சேருங்க. இரண்டும் நல்லா சூடானதும் 2 பட்டையை சேருங்க. 6 ஏலக்காய், 6 கிராம்பு, ஒரு பிரியாணி இலையை சேருங்க.
செய்வது எப்படி? எல்லாமே நல்லா பொரிந்ததும் பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி சேருங்க. நல்லா பொன்னிறமாகும் வரை வதக்குங்க. அப்போ தான் டேஸ்டா இருக்கும்.
செய்வது எப்படி? அப்புறம் 4 பச்சை மிளகாயை நடுவில கீறிட்டு சேருங்க. இப்போ 2 டேபிள் ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது நல்லா சேருங்க.
செய்வது எப்படி? இப்போ நல்லா வதக்குங்க. இப்போ அடுப்பில் தீயை நல்லா குறைத்துவிட்டு கொஞ்சம் உப்பு சேருங்க. இதனால் பாத்திரத்தில் பிடிக்காது.
செய்வது எப்படி? 2 தக்காளியை நல்லா கட் செய்து அதையும் கூட சேர்த்து நல்லா வதக்குங்க. இப்போ ஒரு கைப்பிடி நறுக்கிய மல்லி இலையையும், ஒரு கைப்பிடி நறுக்கிய புதினாவையும் சேர்த்து நல்லா வதக்குங்க.
செய்வது எப்படி? இப்போ ஒரு கைப்பிடி காஷ்மீரி மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நல்லா கிளறி விடுங்க. தயிர் 2 டீஸ்பூன் சேருங்க. நல்லா கலக்கிவிடுங்க.
செய்வது எப்படி? அப்போ தான் நமக்கு சாதம் மென்மையாக வரும். அடுத்து பாதி எலுமிச்சம்பழச் சாற்றைக் கலந்து விடுங்க.