ருசியான ரவாலட்டு ரெசிப்பி இதோ!

தேவையான பொருட்கள். வறுத்த ரவா- 250-கிராம்

தேவையான பொருட்கள். ஜீனி – 250-கிராம்

தேவையான பொருட்கள். நெய் –200  கிராம்

தேவையான பொருட்கள். முந்திரிபருப்பு – 10,

தேவையான பொருட்கள். ஏலக்காய் – 5

செய்முறை: வெறும் கடாயில் ரவயை நன்கு வாசனைவரும் வரை வறுத்து கொள்ளவும். ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். நன்கு ஆறியதும் ரவையை தனியாக மிக்சியில் பொடித்து கொள்ளவும்.

செய்முறை: அடுத்து ஜீனியையும் பொடிக்கவும்பொடித்தரவை, ஜீனியை நன்கு ஒரு சேர கலந்துவைக்கவும். ஏலக்காயை பொடிசெய்து மேலாக போடவும்.

செய்முறை: முந்திரியை சிறிதளவு நெய்யில் சிவக்க வறுத்து அதையும் சேர்க்கவும். நெய்யை நன்கு சூடுபண்ணி ரவை, ஜீனிக்கலவையில் பரவலாக சுழற்றி ஊற்றவும்.

செய்முறை: எல்லாவற்றையும் கரண்டி பயன் படுத்தி நன்கு கலந்து விடவும். பிறகு கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.

செய்முறை: நெய்குறைவாக இருந்தால் உருண்டை பிடிக்கவராது உதிர்ந்துபோகும். சரியான அளவில் நெய் சேர்த்தால்தான் சுலபமாக உருண்டைகள் பிடிக்கவரும்.