திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்து களி ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு– 6 கப்

தேவையான பொருட்கள்: வெல்லம் – 500 கிராம்

தேவையான பொருட்கள்: தேங்காய் துருவியது – 1 கப்

தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: அரிசிமாவு – 1 கப்

தேவையான பொருட்கள்: ஏலக்காய்த் தூள் – 5

தேவையான பொருட்கள்: நெய் – சிறிதளவு

செய்முறை : – முதலில் உளுந்தப் பருப்பினை வறுத்து அரைத்துக் கொள்ளவும், அடுத்து அரைத்த மாவை ஒரு கடாயில் நன்கு நெய் ஊற்றி வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

செய்முறை : – பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி மாவை நன்றாக கட்டி சேராமல் கரைத்து கொள்ளவும், பின் அதை கொதிக்க வைத்து, அதனுடன் நெய்யில் வறுத்த உளுந்த மாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

செய்முறை : – அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கட்டி இல்லாதவாறு கலந்து வரவும்.அதில் அடியில் ஒட்டாமல் இருக்க நல்லெண்ணெய் ஊற்றி நன்றாகக் கிண்டவும்.

செய்முறை : – சிறிது நேரம் கழித்து அது கட்டியாக மாறும். அது நல்ல பதத்திற்கு வரும் வரை விடாமல் கிண்டவும். பின்னர், அதனுடன் ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறி பரிமாறவும்.