செம டேஸ்ட்டியான கோவைக்காய் சாதம் ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்:- சாதம் – 1 கிண்ணம்

தேவையான பொருட்கள்:- கோவைக்காய் – 10

தேவையான பொருட்கள்:- மஞ்சள் தூள் – சிறிதளவு

தேவையான பொருட்கள்:- உப்பு – தேவைக்கேற்றவாறு

தேவையான பொருட்கள்:- கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்:- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்:- காய்ந்த மிளகாய் – 2

தேவையான பொருட்கள்:- கெட்டி பெருங்காயம் – ஒரு சிறு துண்டு

தேவையான பொருட்கள்:- வெள்ளை எள் – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்:- எண்ணெய் – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்:- கடுகு – 1/4 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்:- வேர்க்கடலை – 2 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்:- முந்திரிப்பருப்பு – சிறிது

தேவையான பொருட்கள்:- பச்சை மிளகாய் – 1

தேவையான பொருட்கள்:- கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:- 1) கோவைக்காயை நன்றாகக் கழுவி விட்டு, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை:- 2) தோசைக்கல் அல்லது அகலமான தாவாவை அடுப்பிலேற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள காயை, தனித்தனியாக பரப்பி வைக்கவும்.

செய்முறை:- 3) அதன் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு, அவ்வப்பொழுது திருப்பி விட்டு சிவக்க வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:- 4) வெறும் வாணலியில் வெள்ளை எள்ளைப் போட்டு சிவக்கும் வரை அல்லது பொரிய ஆரம்பிக்கும் வரை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

செய்முறை:- 5) அதே வாணலியில் சிறிது எண்ணை விட்டு அதில் பெருங்காயம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப்போட்டு சிவக்க வறுத்தெடுத்து ஆற விடவும்.

செய்முறை:- 6) ஆறியதும், அத்துடன் வறுத்து வைத்துள்ள எள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

செய்முறை:- 7) ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சற்று வறுக்கவும்.

செய்முறை:- 8)பின் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப்போடவும். கறிவேப்பிலையையும் போட்டு சற்று வறுத்து, அதன் பின் வதக்கி வைத்துள்ள கோவைக்காய் துண்டுகள், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும்.

செய்முறை:- 10) பின்னர் அதில் சாதத்தைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கிளறி விடவும்.

செய்முறை:- 11) கடைசியில் பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவி, ஒரு டீஸ்பூன் எண்ணையையும் விட்டு நன்றாகக் கலந்து இறக்கி வைக்கவும்