ருசியான பாகற்காய் தொக்கு ரெசிபி இதோ..
தேவையான பொருட்கள் : பாகற்காய் – 1 கிலோ
தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – அரை கிலோ
தேவையான பொருட்கள் : மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் : புளி – சிறிய எலுமிச்சம்பழ அளவு
தேவையான பொருட்கள் : வெல்லம் – கால் கப்
தேவையான பொருட்கள் : கடுகு – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் : உப்பு – சுவைக்கு ஏற்ப
தேவையான பொருட்கள் : எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை : முதலில் பாகற்காயைக் கழுவி, விதைகளை நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். புளியை கரைத்து ஒரு கப் அளவிற்கு எடுத்து கொள்ளவும்.
செய்முறை : ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு, வெந்தையம் போட்டு தாளித்து, பாகற்காயை சேர்த்து நன்கு வதக்கவும் , அது நன்கு வதங்கியதும், அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
செய்முறை : வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் புளி கரைசல், உப்பு, மஞ்சள் ,மிளகாய்த்தூள், வெல்லம் அனைத்தையும் சேர்த்து 15 நிமிடம் நன்கு வேகவைத்து கிளறி இறக்கினால் பாகற்காய் தொக்கு ரெடி.