உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, அக்டோபர் 9 ஆம் தேதி துவங்கிய நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக உள்ளே சென்ற ஜிபி முத்து தற்போது முதல் போட்டியாளராக வெளியே வந்துள்ளார்.  

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து டைட்டில் பட்டத்தை வெல்வார் என ஜிபி முத்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வந்த நிலையில், இவர் திடீர் என வெளியேறி உள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம் முழுக்க மிகவும் கலகலப்பாக இருந்த ஜிபி முத்து இரண்டாவது வாரத்தில் இருந்து, தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளின் நியாபகம் வந்ததால் கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என, பலமுறை பிக்பாஸ்ஸிடம் கோரிக்கை வைத்து வந்தார். 

பிக்பாஸ் சில முறை  ஜிபி முத்துவை அழைத்து, அவரது பிள்ளைகளிடம் பேசியதாகவும்... அவர்கள் உங்களை 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும் தெரிவித்து சமாதானம் செய்ய முயற்சித்தார்.  

ஆனால் ஜி பி முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது மிகவும் உறுதியாக இருந்தார். மேலும் தன்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து பெரிய அனுப்பாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.  

பின்னர் ஜிபி முத்துவை அழைத்து பேசிய பிக்பாஸ் முடிவு உங்களுடையது, அனைத்து போட்டியாளர்களிடம் இருந்து விடைபெற்று மெயின் டோர் வழியாக வெளியே வாருங்கள் என கூறினார்.  

இது குறித்து கண்ணீருடன் ஜிபி முத்து பிக்பாஸ் இடம் பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. 

ஜிபி முத்துவின் இந்த முடிவு அவரது ஆர்மியை சேர்ந்தவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்து இருந்தாலும், குடும்பத்தை காண வேண்டும் என்பதற்காக இவ்வளவு பெரிய வாய்ப்பை உதறி தள்ளிவிட்டு வரும் அவரது பாசத்தையும் பலர் மதிப்பு அவரை வாழ்த்தி வரவேற்று வருகின்றனர்.