சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒரு நபர் ஜி.பி.முத்து.  

இவர் ஆரம்பத்தில் டிக்டாக் வீடியோக்களை வெயிட்டதன் மூலம் படு பிரபலம் ஆனார். 

வீடியோ வெளியிடவில்லை என்றாலே உடனே அவரது ரசிகர்கள் எங்கே முத்து வீடியோ காணும் என்ற அளவிற்கு பார்ப்பார்கள். 

அதில் படு பிரபலம் அடைந்த ஜி.பி.முத்து கொரோனா காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இதனால் தற்கொலை செய்ய மருத்துவமனையில் இருந்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. 

டிக் டாக் மூலம் பிரபலம் ஆன ஜி.பி. முத்து சொந்தமாக ஒரு யூடியூப் திறந்து அதிலும் வீடியோ வெளியிட்டு வந்தார்.  

பிக்பாஸ் நுழைவதற்கு முன் தனது நண்பர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து நான் பிக்பாஸ் செல்கிறேன் எனக்கு உங்களது ஆதரவு கண்டிப்பாக வேண்டும் என கூறியிருக்கிறார். 

அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. 

ஜிபி முத்துவின் தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்து இருந்தாலும், குடும்பத்தை காண வேண்டும் என்பதற்காக இவ்வளவு பெரிய வாய்ப்பை உதறி தள்ளிவிட்டு வரும் அவரது பாசத்தையும் பலர் மதிப்பு அவரை வாழ்த்தி வரவேற்று வருகின்றனர்.