பெரிய நெல்லிக்காய் வைத்து ஐந்தே நிமிடத்தில் நெல்லிக்காய் சாதம் ரெடி!

தேவையான பொருட்கள்: வேகவைத்த சாதம் – 2 கப்

தேவையான பொருட்கள்: பெரிய‌ நெல்லிக்காய் – 10

தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் – 4

தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: இஞ்சி – தேவைக்கு ஏற்ப

தேவையான பொருட்கள்: கடுகு – ஒரு தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: பெருங்காயம் – கால் தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – கையளவு

தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: சீரகம் – 1 தேக்கரண்டி

செய்முறை: நெல்லிக்காயை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து அதன் சதைப்பகுதியைத் துருவி அல்லது சற்று பெரியதாக நறுக்கி, அதனை மிக்ஸியில் சேர்த்து சாறு எடுத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை: அடிப்பகுதி கனமான கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்து பொரிந்ததும் சீரகம், உளுத்த‌ம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கடலைப்பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும்.

செய்முறை: இதில் இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும், பெருங்காயம், நெல்லிக்காய் சாறு, மஞ்சள் தூள் சேர்த்து சாறு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். வேகவைத்த சாதத்தை, தேவையான அளவு சேர்த்துக் கிளறவும். இப்போது நெல்லிக்காய் சாதம் ரெடி.