அனைவருக்கும் பிடித்தமான மோதிச்சுர் லட்டு ரெசிப்பி!
தேவையான பொருள்கள் கடலை மாவு – 1 கப்
தேவையான பொருள்கள் உப்பு – கால் ஸ்பூன்
தேவையான பொருள்கள் ஆரஞ்சு கலர் – சிறிது
தேவையான பொருள்கள் நெய் – 3 ஸ்பூன்
தேவையான பொருள்கள் சர்க்கரை – 1 கப்
தேவையான பொருள்கள் முந்திரி பருப்பு – தேவைக்கு
தேவையான பொருள்கள் ஏலக்காய்– தேவைக்கு
எப்படி செய்வது? கடலை மாவு, உப்பு, ஆரஞ்சு கலர் மூன்றையும் சேர்த்து நல்லா கரைச்சிக்கோங்க. அதை தனியாக எடுத்து வைங்க. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையைக் காய விடுங்க.
எப்படி செய்வது? பூந்தி தட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மாவை விட்டு கொதிக்கும் எண்ணையில் தட்ட வேண்டும். சில்வர் வடிகட்டியில் அதை எடுத்து எண்ணையை வடிகட்டுங்க.
எப்படி செய்வது? இப்போது தனியாக சர்க்கரை பாகு ரெடி பண்ணனும். ஒரு கப் அளவு சர்க்கரை, முக்கால் கப் தண்ணீர், கொஞ்சம் ஆரஞ்சு கலர் பொடி சேர்த்து வாணலியில் விட்டு கொதிக்க விடுங்க. இப்போது ஏற்கனவே பொரித்து வைத்த பூந்தியை அதில் போடுங்க.
எப்படி செய்வது? இப்போடு அடுப்பை சிம்மில் தான் வைக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து நல்லா கிளறி விடுங்க. பத்து நிமிஷம் இப்படி கொதிக்க வேண்டும். அப்போது தான் பூந்தி மெதுவாக இருக்கும்.
எப்படி செய்வது? இப்போது பொடியாக கட் செய்த முந்திரி பருப்பை சேருங்க. அடுத்து 3 ஸ்பூன் நெய் சேருங்க. ஏலக்காய் சிறிதளவு சேர்த்து நல்லா கலந்து விடுங்க. இப்போ சூடாக இருப்பதால் 15 நிமிஷம் ஆற விடுங்க.
எப்படி செய்வது? இப்போது உங்களுக்கு லட்டு என்ன சைஸ்க்கு தேவையோ அது போல சின்னதா உருட்டி இப்படி அழகா லட்டு செய்யலாம். இது தான் மோதிச்சுர் லட்டு.