குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் முட்டை பேஜோ!!

தேவையானவை: முட்டை- 3

தேவையானவை: வெங்காயம் – 2

தேவையானவை: பூண்டு – 1

தேவையானவை: காய்ந்த மிளகாய்- 3

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

தேவையானவை: புளி – சிறிதளவு

தேவையானவை: கொத்தமல்லி இலை- தேவையான அளவு

தேவையானவை: எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை 1.   முட்டையினை வேகவைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி இலை, பூண்டினை நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரில் புளியையும், உப்பையும் போட்டு தனித்தனியாக ஊறவிடவும்.

செய்முறை 2.   காய்ந்த மிளகாயினை வாணலியில் எண்ணெய்விட்டு வதக்கி மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை 3.   அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, அரைத்த காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.

செய்முறை 4.   அடுத்து முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் வதக்கிய கலவையை வைத்து அதன்மேல் எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் தெளித்து கொத்தமல்லி இலை தூவினால் முட்டை பேஜோ ரெடி.