சுவையான சுறா மீன் குழம்பு!!

சுறா மீன் –500 கிராம்

வெங்காயம் – 2

தக்காளி -2

பச்சை மிளகாய்- 3

பூண்டு –   10 பல்

மஞ்சள் தூள் –1/2 ஸ்பூன்

மிளகாய்த் தூள்   – 1 ஸ்பூன்

கடுகு   – 1  ஸ்பூன்

கறிவேப்பிலை  – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

புளி- எலுமிச்சை அளவு

செய்முறை 1. மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாயை, தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.

செய்முறை 2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை  போட்டு தாளித்து,  வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைப் போட்டு  வதக்கவும்.

செய்முறை 3. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

செய்முறை 4. அடுத்து இதனுடன் புளித் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு கணவாய் மீனைப் போட்டு வேகவிடவும்.

செய்முறை 5. எண்ணெய் பிரிந்துவரும்போது இறக்கினால் சுறா மீன் குழம்பு ரெடி