சுவையான காளான் பிரியாணி!!
தேவையானவை: பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
தேவையானவை: காளான் – கால் கிலோ
தேவையானவை: வெங்காயம் – 4
தேவையானவை: தக்காளி – 3
தேவையானவை: இஞ்சி- 1 துண்டு
தேவையானவை: பூண்டு- 1
தேவையானவை: பட்டை- 4
தேவையானவை: பிரியாணி இலை – 5
தேவையானவை: கிராம்பு- 5,
தேவையானவை: ஏலக்காய் – 5
தேவையானவை: மிளகாய்த் தூள் – 11/2 டீஸ்பூன்
தேவையானவை: மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தேவையானவை: மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
தேவையானவை: பச்சை மிளகாய் – 5
தேவையானவை: தயிர் – 1 டம்ளர்
தேவையானவை: நெய் –150 மில்லி அளவு
தேவையானவை: எலுமிச்சை பழம் – 1
தேவையானவை: கொத்தமல்லி தழை- கைப்பிடியளவு
தேவையானவை: புதினா – கைப்பிடியளவு
தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: 1. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். காளானை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை: 2. அடுத்து குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் போட்டு தாளித்து அத்துடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
செய்முறை: 3. அடுத்து கொத்தமல்லி, புதினா இலை, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் போட்டு வதக்கவும்.
செய்முறை: 4. அடுத்து காளான், உப்பு, தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வேகவிட்டு, அரிசியைப் போட்டு அதனைவிட இரண்டு மடங்கு தண்ணீர்விட்டு வேக விடவும்.
செய்முறை: 5. அடுத்து விசில் வரும்போது எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு இறக்கினால் காளான் பிரியாணி ரெடி.