சுவை மிகுந்த கை முறுக்கு!

தேவையானவை:  பச்சரிசி – 2 கப்,

தேவையானவை:  உளுத்தம்பருப்பு – கால் கப்,

தேவையானவை:  வெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்,

தேவையானவை:  எள் – ஒரு டேபிள்ஸ்பூன்,

தேவையானவை:  பெருங்காயத்தூள் – சிறிதளவு,

தேவையானவை:  உப்பு- தேவையான அளவு,

தேவையானவை:  எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கை முறுக்கு சுற்ற பிசுக்குள்ள அரிசியாக இருந்-தால் நல்லது. அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

செய்முறை: ஊறிய பிறகு வெள்ளைத் துணியில் முடிந்து வைத்து அதில் தண்ணீர் வடிந்து விடும்.

செய்முறை: பிறகு அதை மிக்ஸியில் போட்டு மாவாக்கி நைஸாக சலிக்கவும். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அரைத்து சலித்துக் கொள்ளவும்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து பிசையவும்.

செய்முறை: மாவு பதம் நன்றாக இருந்தால்தான் நன்றாக முறுக்கு சுற்ற முடியும். வெள்ளைத் துணி மேல் ஒரு பாட்டில் மூடியை வைத்து, அதைச் சுற்றி முறுக்கு சுற்றவும்.

செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்ததும், அதில் ஒவ்வொரு முறுக்காக மெதுவாக எடுத்து நிதானமாக போடவும்.