தித்திப்பான ஜிலேபி ரெசிப்பி!

தேவையான பொருட்கள்: மைதா மாவு – கால் கிலோ,

தேவையான பொருட்கள்: சர்க்கரை – முக்கால் கப்,

தேவையான பொருட்கள்: கெட்டி தயிர் – 2 தேக்கரண்டி,

தேவையான பொருட்கள்: சிவப்பு புட் கலர் – கால் தேக்கரண்டி,

தேவையான பொருட்கள்: உப்பு – ஒரு சிட்டிகை,

தேவையான பொருட்கள்: எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: தயிருடன் உப்பு சேர்த்து கலக்கவும். இதனுடன் மைதா மாவு, சிவப்பு கலர் புட் சேர்த்து, வடை மாவு பதத்துக்கு பிசையவும்.

செய்முறை: சர்க்கரை மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி, கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சி இறக்கவும்.

செய்முறை: கெட்டியான துணி அல்லது பாலிதீன் கவரின் நுனியில் சிறு துளை போடவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை துணி அல்லது பாலிதீன் கவரில் போட்டு ஜிலேபி போல பிழிந்து, இருபக்கமும் வேக விடவும்.

செய்முறை: பின், இதை பாகில் போட்டு ஊற வைத்து எடுக்கவும். சுவையான ஜிலேபி தயார்.