வீட்டிலேயே சுவையான தக்காளி சாஸ் ரெசிப்பி!!
தேவையானவை : தக்காளி – ஒரு கிலோ
தேவையானவை : மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை : சர்க்கரை – 3 ஸ்பூன்
தேவையானவை : உப்பு – 1 பிஞ்ச்
தேவையானவை : இஞ்சி – 1/2 துண்டு
தேவையானவை : பூண்டு – 3 பல்
தேவையானவை : பட்டை – 2
தேவையானவை : கிராம்பு – 2
தேவையானவை : எலுமிச்சைப்பழச் சாறு – 3 ஸ்பூன்.
செய்முறை : 1. தக்காளியை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். அடுத்து பூண்டு, இஞ்சியைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை : 2. அடுத்து குக்கரில் தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரை விட்டு வேக விட்டு இறக்கி நன்கு மசித்து விடவும்.
செய்முறை : 3. அடுத்து அரைத்த பேஸ்ட்டினை நன்கு வடிகட்டி, ஒரு பாத்திரத்னை அடுப்பில் வைத்து நன்கு கிளறவும். சாஸ் பதம் வந்ததும், எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்து இறக்கினால் தக்காளி சாஸ் ரெடி.