கோதுமை மாவில் ருசியான குளோப் ஜாமுன் ரெசிப்பி!

தேவையானவை: கோதுமை மாவு – 1 கப்

தேவையானவை: பால் பவுடர் – 4 ஸ்பூன்

தேவையானவை: பால் – 1/4 டம்ளர்

தேவையானவை: சர்க்கரை – 1 டம்ளர்

தேவையானவை: ஏலக்காய் – 3

தேவையானவை: ஆரஞ்ச் கலர் – 1 சிட்டிகை

தேவையானவை: பேக்கிங் சோடா – 1/2 டிஸ்பூன்

தேவையானவை: நெய் – தேவைக்கு ஏற்ப

தேவையானவை: எண்ணெய் – 1/4 லிட்டர்.

செய்முறை: ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும்.

செய்முறை: பிறகு மீண்டும் சிறிது நெய் சேர்த்து கோதுமை மாவின் பச்சை வாடை செல்லும் வரை வறுத்து கொள்ளவும்.

செய்முறை: நன்கு வறுத்த பின், ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆற விடவும்.மாவு நன்றாக ஆறிய பின் பால்,பால் பவுடர்,பேக்கிங் சோடா மற்றும் நெய் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

செய்முறை: அப்படி பிசைந்த மாவினை 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும் .10 நிமிடங்கள் ஆனவுடன் மாவினை சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

செய்முறை: அடுப்பில் ஒரு கடாய் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

செய்முறை: எண்ணெய் நன்றாக காய்ந்த உடன் தீயை சிம்மில் வைத்து, பிடித்து வைத்துள்ள மாவு உருண்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெயில் போட்டு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

செய்முறை: இப்போது வறுத்து வைத்துள்ள ஜாமூன்களை சர்க்கரை பாகில் சேர்த்து, நன்கு மிக்ஸ் செய்து 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின் சுவைத்தால் இனிப்பான கோதுமை மாவு குலோப் ஜாமூன் ரெடி.