சுவையான நெய் பால் கேக் ரெசிப்பி!
தேவையான பொருட்கள் நெய் – 3 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் எலுமிச்சைசாறு – 2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் சர்க்கரை – ¾ கப்
தேவையான பொருட்கள் பால் – 1½ லிட்டர்
தேவையான பொருட்கள் பாதாம்- 3,
தேவையான பொருட்கள் பிஸ்தா- 3
செய்முறை: பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு நான்ஸ்டிக் ஸ்டிக் கடாயில் ஒன்றரை லிட்டர் பாலை ஊற்றி அதை மிதமான சூட்டில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அடிப்பிடிக்காமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
செய்முறை: இரண்டு மணி நேரத்திற்கு பிறகு திரட்டுப்பால் போல் பாலானது திரண்டு வரும்.
செய்முறை: அதில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து மறுபடியும் கிளற வேண்டும். இப்பொழுது முக்கால் கப் சர்க்கரையை சிறிது சிறிதாக கலந்து கிளற வேண்டும்.
செய்முறை: பால் திரட்டானது சர்க்கரை சேர்த்தவுடன் இளகி மறுபடியும் கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளற வேண்டும். இப்பொழுது நெய்யையும் ஊற்றி கிளற, கிளற நன்கு திரண்டு வரும்.
செய்முறை: பின்பு ஒரு ட்ரேயில் நெய் தடவி இந்தப் பால் திரட்டை அதில் கொட்டி சமப்படுத்தி வைக்க வேண்டும்.
செய்முறை: இந்த கலவையை அறை வெப்பத்திலேயே நன்கு ஆறவிட்டு விட வேண்டும். நன்கு ஆறிய பின்பு இவற்றை வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போட்டு அதன் மேல் பாதாம், பிஸ்தா வைத்து அலங்கரிக்கலாம்..