சுவையான கத்தரிக்காய் பொரியல் ரெசிப்பி!!
தேவையானவை: கத்தரிக்காய் – 8
தேவையானவை: பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
தேவையானவை: தேங்காய் – கால் மூடி
தேவையானவை: கடுகு – 1/2 டீஸ்பூன்
தேவையானவை: காய்ந்த மிளகாய் – 2
தேவையானவை: கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
தேவையானவை: உளுந்து – 1 ஸ்பூன்
தேவையானவை: மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
தேவையானவை: கறிவேப்பிலை – சிறிதளவு
தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு
தேவையானவை: உப்பு – தேவையான அளவு
செய்முறை : 1. கத்திரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
செய்முறை : 2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
செய்முறை : 3. அடுத்து கத்தரிக்காயினைப் போட்டு வதக்கி தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.
செய்முறை : 4. அடுத்து உப்பு சேர்த்துக் கலந்து மிளகாய்த் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிட்டு இறக்கினால் கத்தரிக்காய் பொரியல் ரெடி.