டேஸ்ட்டியான ஆப்பிள் பர்ஃபி ரெசிபி!
தேவையான பொருட்கள்.: ஆப்பிள் – 2 ,
தேவையான பொருட்கள்.: தேங்காய்த் துருவல் – ஒன்றரை கப்,
தேவையான பொருட்கள்.: சர்க்கரை – அரை கப்,
தேவையான பொருட்கள்.: சீவிய பிஸ்தா – ஒரு டேபிள்டீஸ்பூன்,
தேவையான பொருட்கள்.: நெய் – ஒரு டேபிள்டீஸ்பூன்,
தேவையான பொருட்கள்.: உப்பு – ஒரு சிட்டிகை ,
தேவையான பொருட்கள்.: ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை.
செய்முறை.: முதலில் ஆப்பிளில் தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். அடுத்து கடாயில் சிறிதளவு நெய் விட்டு தேங்காய்த் துருவல், ஆப்பிள் துருவல் சேர்த்து கிளறவும். பின்பு அதனுடன் உப்பு சேர்த்துக் கிளறி கொள்ளவும்.
செய்முறை.: பிறகு, அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும். இந்தக்கலவையை கைவிடாமல் கிளற வேண்டும் இல்லையென்றால் கட்டியாக மாறி விடும்.
செய்முறை.: இந்த கலவை சற்று இருக்கும் போது சிறிதளவு நெய் சேர்த்து கொள்ளலாம். இந்த நேரத்தில் இதில் ஏலக்காய் பொடி சிறிதளவு சேர்த்தால் வாசனையாக இருக்கும். இந்த கலவை பர்ஃபி பதத்துக்கு வந்ததும் இறக்கி விடவும்.
செய்முறை.: ஒரு தட்டில் சிறிது நெய்யை தடவி அதில் கலவையைப் போட்டு பரப்பி கொள்ளவும் , அதன் மீது சீவிய பிஸ்தாவை தூவவும். ஆறியதும் துண்டுகளாக்கி கட் செய்து கொள்ளவும்.