மொறு மொறு இனிப்பு சமோசா ரெசிப்பி!

தேவையான பொருட்கள் : மைதா மாவு -கால் கிலோ

தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் -கால் கப்

தேவையான பொருட்கள் : வெல்லம் கால் கிலோ

தேவையான பொருட்கள் : எண்ணெய் – 1 கப்

தேவையான பொருட்கள் : ஏலக்காய் 2

தேவையான பொருட்கள் : உப்பு – சிறிதளவு

செய்முறை : முதலில் மைதா மாவில் தேவையான அளவு தண்ணீர் , உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

செய்முறை : அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு பாகு தயாரிக்கவும் பின்பு அதனுடன் தேங்காய் துருவலை போட்டு நன்றாகக் கிளறி கொள்ளவும்.

செய்முறை : பின்பு தண்ணீர் வற்றி போகும் வரை கொட்டியாக கிளறவும் அதில் ஏலாக்காயை பொடி போட்டு கலக்கி தேங்காய் பூரணத்தை இறக்கி ஆற வைக்கவும்.

செய்முறை : பூரணம் ஆறியதும் அதை சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மைதா மாவை முக்கோண வடிவில் தேய்த்து வெட்டிக் கொள்ளவும்.

செய்முறை : பின்பு உருட்டி வைத்துள்ள தேங்காய் பூரணத்தை நடுவில் வைத்து மூடி சமோசா வடிவம் போல் செய்யவும்.

Fill in some text