மொறுமொறுப்பான காளான் 65 ரெசிப்பி!!

தேவையானவை: காளான் – கால் கிலோ

தேவையானவை: கடலை மாவு – 2 ஸ்பூன்

தேவையானவை: கான்ப்ளவர் மாவு – 1 1/2 ஸ்பூன்

தேவையானவை: அரிசி மாவு – 1 ஸ்பூன்

தேவையானவை: மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்

தேவையானவை: தனியாத் தூள் – 2 ஸ்பூன்

தேவையானவை: மிளகுத் தூள் – 2 ஸ்பூன்

தேவையானவை: கரம் மசாலாத் தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை: இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 1.    காளானை சுத்தம் செய்து நன்கு கழுவி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை: 2.    அடுத்து ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, கான்பிளவர் மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலாத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். இத்துடன் காளான் சேர்த்து ஊறவைக்கவும்.

செய்முறை: 3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காளானைப் போட்டு பொரித்து காளான் 65 ரெடி.