மொறு மொறு மீன் கோலா உருண்டை!

தேவையான பொருட்கள் வஞ்சிரம் மீன் – 250 கிராம்

தேவையான பொருட்கள் பிரெட் தூள் – தேவைக்கு ஏற்ப

தேவையான பொருட்கள் சோள மாவு – 2 தேக்கரண்டி

தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம் – 1

தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு – 1

தேவையான பொருட்கள் பூண்டு – 4 பல்

தேவையான பொருட்கள் இஞ்சி – சிறிதளவு

தேவையான பொருட்கள் மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி

தேவையான பொருட்கள் மிளகு தூள் – சிறிதளவு

தேவையான பொருட்கள் கொத்தமல்லி – சிறிதளவு

தேவையான பொருட்கள் மிளகாய் தூள்- காரத்திற்கு ஏற்ப

தேவையான பொருட்கள் எண்ணெய் – தேவைக்கு ஏற்ப,

தேவையான பொருட்கள் உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ளவும். அடுத்து மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீன் துண்டுகள் சிறிது உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் வேக விடவும்.

செய்முறை: வெந்த மீனை ஆறவிட்டு, தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

செய்முறை: அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டைசேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

செய்முறை: அடுத்து அதில் உதிர்த்து வைத்துள்ள மீனை போட்டு அதை நன்கு கலந்து விடவும். பின் அதில் மிளகு தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

செய்முறை: பிறகு அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கிளறி விட்டு அதை வேக விடவும்.

செய்முறை: அனைத்தும் ஒன்று சேர்ந்து வரும் போது கொத்தமல்லியை தூவி கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

செய்முறை: மேலும் ஒரு பவுலில் சோள மாவை போட்டு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

செய்முறை: பிடித்து வைத்துள்ள உருண்டைகளை சோள மாவில் நன்கு முக்கி கொள்ளவும் பின்பு பிரெட் தூளில் நன்றாக பிரட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் செய்து ஓரமாக வைக்கவும்.

Fill in some text