சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற முறுமுறு சோள தோசை!
தேவையானப் பொருட்கள் : வெள்ளை சோளம் – 1 கப்
தேவையானப் பொருட்கள் : இட்லி அரிசி – 1 கப்
தேவையானப் பொருட்கள் : உளுந்து – அரை கப்
தேவையானப் பொருட்கள் : வெந்தயம் – 1 தேக்கரண்டி
தேவையானப் பொருட்கள் : பச்சை மிளகாய் – 2
தேவையானப் பொருட்கள் : வெங்காயம் – 1
தேவையானப் பொருட்கள் : சீரகம் – 1 தேக்கரண்டி
தேவையானப் பொருட்கள் : உப்பு – சுவைக்கு ஏற்ப
தேவையானப் பொருட்கள் : எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை : முதலில் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 6 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும், அடுத்து சோளத்தை தனியாக ஊற வைக்க வேண்டும்.
செய்முறை : பின்பு 6 மணி நேரம் நன்கு ஊறியதும் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயக் கலவையை இட்லி மாவு பதத்திற்கு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
செய்முறை : பிறகு, சோளம் ஊறியதும் நன்கு கழுவி நீர் விடாமல் அரைத்து கொள்ளவும். பின்பு நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்
செய்முறை : அதை முன்னதாக அரைத்த உளுந்த மாவோடு சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
செய்முறை : பின்பு, அடுப்பில் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தோசை மாவுப் பதத்திற்கு மாவை கரைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டால் சுவையான தோசை ரெடி.