மொறுமொறு பாகற்காய் வறுவல்!!

தேவையானவை: பாகற்காய் – அரை கிலோ

தேவையானவை: மஞ்சள் தூள் –1/2 ஸ்பூன்

தேவையானவை: மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 1.    பாகற்காயில் உள்ள விதைகளை நீக்கி வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை: 2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து பாகற்காய் போட்டு தண்ணீர் தெளித்து நன்கு குலுக்கி பிரிட்ஜில் ஊறவைக்கவும்.

செய்முறை: 3.    அதன்பின்னர் 30 நிமிடங்கள் கழித்து பாகற்காயினை எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறுமொறு பாகற்காய் வறுவல் ரெடி.