நெஞ்சு சளிக்கு ஏற்ற சிக்கன் சூப் ரெசிப்பி!
தேவையான பொருட்கள்: சிக்கன் –250 கிராம்
தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
அரைத்து கொள்ளும் பொருள் : சின்ன வெங்காயம் – 10
அரைத்து கொள்ளும் பொருள் : கொத்தமல்லி – 1/4 கப்
அரைத்து கொள்ளும் பொருள் : சீரகம் – 1 தேக்கரண்டி
அரைத்து கொள்ளும் பொருள் : மிளகு – 1/2 தேக்கரண்டி
அரைத்து கொள்ளும் பொருள் : இஞ்சி – பெரிய துண்டு
அரைத்து கொள்ளும் பொருள் : பூண்டு – 4 பல்
தாளிக்க. எண்ணெய் – 1 1/2 தேக்கரண்டி
தாளிக்க. கறிவேப்பிலை – சிறிதளவு
தாளிக்க. பெரிய வெங்காயம் – 1
செய்முறை: * முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ளவும். பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி ,பூண்டு ,மிளகு, சீரகத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்
செய்முறை: ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து லேசான வதக்கவும்
செய்முறை: அடுத்து அதில் கழுவிய சிக்கன் துண்டுகள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.
செய்முறை: பின்பு தேவையான அளவு நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் சூப் தயார். இதில் மல்லி தலை தூவினால் சுவை கூடுதலாக இருக்கும்.