சாம்பார் சாதத்திற்கு ஏற்ற சேப்பங்கிழங்கு வறுவல்!!
தேவையானவை: சேப்பங்கிழங்கு – ½ கிலோ
தேவையானவை: சோம்பு – 1 ஸ்பூன்
தேவையானவை: மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
தேவையானவை: தனியாத் தூள் – ½ ஸ்பூன்
தேவையானவை: மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
தேவையானவை: கறிவேப்பிலை- சிறிதளவு
தேவையானவை: உப்பு – தேவையான அளவு
தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: 1. சேப்பங்கிழங்கை கழுவி ஆவியில் வேக வைத்து தோல் உரித்து வட்டவடிவில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சேப்பங்கிழங்கினைப் போட்டு வதக்கவும்.
3. அடுத்து மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிட்டு இறக்கினால் சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி.