கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய சுரைக்காய் மசாலா!
தேவையான பொருட்கள்: சுரைக்காய் – 1/2 கிலோ
தேவையான பொருட்கள்: தயிர் – 1 கப்
தேவையான பொருட்கள்: இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்: சீரகம் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: சீரகப் பொடி – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: மல்லி தூள் – 2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: உப்பு – சுவைக்கு ஏற்ப
தேவையான பொருட்கள்: எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை : முதலில் சுரைக்காயை நன்கு கழுவி தோலுரித்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை : ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்து, நறுக்கி வைத்த சுரைக்காயை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
செய்முறை : பின் சுரைக்காய் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை, 2 நிமிடம் வதக்கி கொள்ளவும் ,
செய்முறை : பின்பு அதில் சீரகப் பொடி, மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி கொள்ளவும், பின்பு கறிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
செய்முறை : பிறகு தயிரை அத்துடன் சேர்த்து கிளறிவிடவும் அதை 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அடுத்து அதனுடன் தண்ணீர் ஊற்றி, 8-10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும் .
செய்முறை : பின்பு 10 நிமிடம் கழித்து சுரைக்காய் வெந்துவிட்டால், அதில் கரம் மசாலா தூவி கிளறி, இறக்கி விடவும். இப்போது அருமையான சுரைக்காய் மசாலா ரெடி.