எலும்பினை வலுவாக்கும் உளுத்தம் கீர் ரெசிப்பி!

தேவையான பொருட்கள் : பால் –250 மி.லி,

தேவையான பொருட்கள் : உளுத்தம் பருப்பு – 100 கிராம்,

தேவையான பொருட்கள் : பச்சரிசி– 100 கிராம்,

தேவையான பொருட்கள் : தேங்காய்த் துருவல் – ஒரு கப்,

தேவையான பொருட்கள் : வெல்லம் –100 கிராம் துருவியது ,

தேவையான பொருட்கள் : ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு ,

தேவையான பொருட்கள் : கேசரி கலர் – சிறிதளவு ,

தேவையான பொருட்கள் : நெய் – தேவையான அளவு

தேவையான பொருட்கள் : சுக்குப்பொடி –1/2 டீஸ்பூன்,

தேவையான பொருட்கள் : முந்திரிப்பருப்பு- தேவையான அளவு.

செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, அரிசியுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். முந்திரிப் பருப்பையும் நெய்யில் வறுத்து கொள்ளவும்.

செய்முறை: தேங்காய்த் துருவலை நன்கு அரைத்துப் பாலெடுக்கவும். சக்கையை பிழிந்து தனியே வைக்கவும்.

செய்முறை: ஊறிய உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியுடன் தேங்காய் சக்கையைச் சேர்த்து, தண்ணீர் விட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

செய்முறை: அரைத்த விழுதைப் போல், இரண்டு மடங்கு தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க வைக்கவும்.

செய்முறை: அதில் அரைத்த விழுதை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டிவிழாமல் கிளறவும்.அதனுடன் வெல்லத்தையும் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

செய்முறை: பத்து நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கி, அதனுடன் ஏலக்காய்ப் பொடி, முந்திரிப் பருப்பு, கேசரிக்கலர், சுக்குப்பொடி சேர்த்துக் கலக்கவும். கடைசியாக தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் கலக்கவும்.