ஆயுத பூஜை சிறப்புகள்

ஆயுத பூஜையானது காளி தேவியின் அனுகூலத்தைப் பெறும் பொருட்டு கொண்டாடப்படுகிறது.

நாம் வருடம் முழுவதும் தொழில் செய்யப் பயன்படும் ஆயுதங்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு கொண்டாடப்படுகிறது.

நாம் செய்யும் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள் என அனைத்தையும் சுத்தம் செய்து, திருநீறு, சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

நமக்கு உபயோகமாக இருக்கும் பொருட்கள் அனைத்துமே தெய்வ வடிவானவை என்ற அடிப்படையிலேயே அனைத்து பொருட்களும் வணங்கப்படுகிறது.