மிகவும் ருசியான சுசியம் ரெசிப்பி!

தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – 1 கப்

தேவையான பொருட்கள்: வெல்லம் –3/4 கப்

தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் – 1/4 கப்

தேவையான பொருட்கள்: சுக்குப்பொடி – 1/2 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: ஏலக்காய் தூள் -1 /2 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: மைதா மாவு – 3/4 கப்

தேவையான பொருட்கள்: எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை: கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் நன்கு கழுவி ஊற வைத்து கொள்ளவும், பின்பு குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை: அடுத்து சூடான வாணலியில் சிறிது நெய் விட்டு தேங்காய் துருவலை மிதமான சூட்டில் வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

செய்முறை: அதே வாணலியில் தேவையான அளவு வெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு, வெல்லம் கரையும் வரை கிளறவும்.

செய்முறை: வெல்லம் நன்கு கரைந்து சிறிது பாகு பதம் வந்தவுடன், அதனுடன் வேக வைத்த கடலைபருப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

செய்முறை: வெல்லப்பாகில் கடலைபருப்பு மற்றும் தேங்காய் துருவல் நன்கு கலந்து ஒரு சேர வேகவிடவும்.

செய்முறை: பின் இதனுடன் சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும், பூரணம் நன்கு உருண்டு வரும் பதத்தில் இறக்கி விடவும்.

செய்முறை: சுசியம் அல்லது சுகியன் செய்வதற்கு தேவையான பூரணம் தயார். மைதா மாவில் சிறிது உப்பு, தண்ணீர் , அரிசி மாவு சேர்த்து ஊற்றும் பதத்தில் மாவாகக் கலந்து எடுத்து கொள்ளவும்.

செய்முறை: பூரணம் ஆறிய பின் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டில் ஓட்டாமல் வைத்து கொள்ளவும்.

Fill in some text