குழந்தைகளுக்கு பிடித்தமான கேரட் மஞ்சூரியன் ரெஸிபி!
தேவையான பொருள்கள்:- கேரட் – 1/4 கிலோ
தேவையான பொருள்கள்:- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தேவையான பொருள்கள்:- பச்சை மிளகாய் – 3
தேவையான பொருள்கள்:- வெங்காயம் – 1
தேவையான பொருள்கள்:- சில்லி சாஸ் – 1/2 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருள்கள்:- சோயா சாஸ் – 1/2 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருள்கள்:- குடைமிளகாய் – 1/2
தேவையான பொருள்கள்:- தக்காளி சாஸ் – 5 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருள்கள்:- சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருள்கள்:- கொத்தமல்லி – தேவையான அளவு
தேவையான பொருள்கள்:- உப்பு – தேவையான அளவு
தேவையான பொருள்கள்:- மைதா – 1/4 கப்
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா,சோள மாவு,மிளகாய் தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு அனைத்து பொருட்களையும் போட்டு அதி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலந்து எடுத்து கொள்ள வேண்டும்.
செய்முறை: பின்னர் ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், கேரட் துண்டுகளை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து அதை மற்றொரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை: பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது காய்ந்த பிறகு, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளி சாறு, சோயா மற்றும் சில்லி சாஸ் சேர்த்து அதை நன்கு கொதிக்க விட வேண்டும்.
செய்முறை: அடுத்து முதலில் கரைத்து வைத்துள்ள மாவை அதனை கடாயில் ஊற்றி அதை நன்கு கொதி விட்டு, பின் வறுத்து வைத்துள்ள கேரட்டை அதில் போட்டு, உப்பு சேர்த்து, நீரானது சுண்டும் வரை கிளறி இறக்கி வைக்க வேண்டும்.
செய்முறை: இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி, சிறிது நேரம் மூடி வைத்து பரிமாறினால், அதன் சுவை தாறுமாறாக இருக்கும்.