ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு பணியாரம்!!

தேவையானவை: கேழ்வரகு மாவு - 1 கப்

தேவையானவை: உளுந்து மாவு - கால் கப்

தேவையானவை: கடுகு - 1 டீஸ்பூன்

தேவையானவை: வெங்காயம் - 1

தேவையானவை: கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்

தேவையானவை: பச்சை மிளகாய் - 2

தேவையானவை: கொத்தமல்லித்தழை- சிறிதளவு,

தேவையானவை: கறிவேப்பிலை – சிறிதளவு

தேவையானவை: நல்லெண்ணெய் - தேவையான அளவு

தேவையானவை: உப்பு - தேவையான அளவு

செய்முறை : 1. கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து கேழ்வரகு மாவு, உளுந்து மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

செய்முறை : 2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து தாளித்து மாவுடன் கலக்கவும்.

செய்முறை : 3. அடுத்து மாவில் தாளித்த கலவையைக் கொட்டி, பணியாரக் கல்லில் எண்ணெய் தடவி மாவினை ஊற்றி வேகவைத்து எடுத்தால் கேழ்வரகு பணியாரம் ரெடி.