சுவையான சேப்பங்கிழங்கு புளிக் குழம்பு ரெசிப்பி!!

தேவையானவை : சேப்பங் கிழங்கு   –1/2 கிலோ

தேவையானவை : வெந்தயம்  –1\4 ஸ்பூன்

தேவையானவை : சின்னவெங்காயம் – 10

தேவையானவை : தக்காளி – 2

தேவையானவை : கறிவேப்பிலை  – சிறிதளவு

தேவையானவை : மஞ்சள் தூள்  – கால் ஸ்பூன்

தேவையானவை : மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை : தனியா தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை : பூண்டு – 1

தேவையானவை : புளி – எலுமிச்சை அளவு

தேவையானவை : எண்ணெய்   – தேவையான அளவு

தேவையானவை : உப்பு- தேவையான அளவு

செய்முறை : 1. சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை தோல் உரித்துக் கொள்ளவும்.

செய்முறை : 2. வாணலியில் எண்ணெய் ஊற்றி  வெந்தயம் போட்டு தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.

செய்முறை : 3. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, சேப்பங் கிழங்கு சேர்த்து வேக விடவும்.

செய்முறை : 4. அடுத்து புளியை நீரில் கரைத்து கொதிக்கவிட்டு எண்ணெய் பிரியும்போது இறக்கினால் சேப்பங் கிழங்கு புளிக்குழம்பு ரெடி.