மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் ஒன்றினை இயக்குகிறார்.

இப்படத்தின் பூஜையானது நேற்று போடப்பட்டுள்ளது.  இப்படத்திற்கு மாமன்னன் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க, மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க , நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடிக்கிறார்.  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.