அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில்.. வானிலை எச்சரிக்கை!

அடுத்த 2 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (நவ.21) காலை 8.30 மணி அளவில் காரைக்காலில் இருந்து கிழக்கு – வட கிழக்கே சுமார் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு – தென் கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

ராமஜெயம் கொலை வழக்கு – ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்!!

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டையில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.