வட தமிழகத்தை குறிவைக்கும் வானிலை; அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழை!

நம் தமிழகத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் சில அறிவிப்புகளை அடுத்து அடுத்து கொடுத்து கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு ரெட் அலார்ட் அறிவித்திருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

அதுமட்டுமில்லாமல் நவம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதியில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. அதன்படி வட கடலோர மாவட்டங்களில் நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.இதனால் வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment