Connect with us

ஷூ, ஹெல்மெட் அணிந்து மின்சாரக்கோளாறு சரி செய்ய வேண்டும்!!-மின்வாரியம்

tneb

தமிழகம்

ஷூ, ஹெல்மெட் அணிந்து மின்சாரக்கோளாறு சரி செய்ய வேண்டும்!!-மின்வாரியம்

கடந்த சில நாட்களாக மின்வாரிய துறை சார்பில் இருந்து பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதுவும் குறிப்பாக உடை விவகாரத்தில் மின்வாரியத்துறை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.

மேலும் பணியின்போது பெண்கள் சேலையுடன் சேர்த்து சுடிதார் அணிந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டன. இந்த நிலையில் மின்சார சீரமைப்பு பணியின் போது மின் ஊழியர்கள் ஷூ மற்றும் ஹெல்மெட் கட்டாய அணிந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

பழுதடைந்த கம்பிகள், வயர்கள், டிரான்ஸ்பார்மர், கம்பங்கள் உடனடியாக மாற்றிட வேண்டும் என்று மின்வாரியம் கூறியுள்ளது. மின்விபத்துகளை தவிர்க்க வேண்டும் என மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டது.

சட்ட விரோத மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது போலீசில் புகார் அளிப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் வாரியம் கூறியுள்ளது.

தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் மின்சாரத் துறை வேலை ஊழியர்களுக்கு அடுத்தடுத்து பல பணிகள் இருக்கும் என்பது தவிர்க்க முடியாததாக காணப்படுகிறது. இதனால் இவைகள் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top