திடீரென்று உயர்ந்த கொரோனா  பாதிப்பு? 4 மாவட்டங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா  பாதிப்பு குறைந்து கொண்டு காணப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று கடந்த இரண்டு மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.

இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் நேற்றைய தினம் ஹாங்காங் அரசு இந்தியாவுடன் உள்ள விமான சேவைகள் பல்வேறு விதமான கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இந்நிலையில் அரியானா மாநில அரசு திடீரென்று 4 மாவட்டங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவித்துள்ளது. ஏனென்றால் ஹரியானா மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 234 ஆக பதிவாகி உள்ளது.

அதுவும் குறிப்பாக குருகிராம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 198 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது இதனால் குருகிராம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அரியானா அரசு முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கியுள்ளது.

அதன்படி குருகிராம், பரிதாபாத், சோனிபட்,ஜஜ்ஜார்  ஆகிய மாவட்டங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது என்று ஹரியானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment