Connect with us

இனி இந்திய வீரர்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள்! விண்வெளித் திட்டங்களில் தனியாருக்கு வாய்ப்பு!!

weapons

செய்திகள்

இனி இந்திய வீரர்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள்! விண்வெளித் திட்டங்களில் தனியாருக்கு வாய்ப்பு!!

இனி இந்திய வீரர்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள்! விண்வெளித் திட்டங்களில் தனியாருக்கு வாய்ப்பு!!

இன்று காலை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கான உரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கினார். இதில் ஏராளமான திட்டங்களையும், நடவடிக்கைகளையும் பற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறி வந்தார்.

இந்த நிலையில் இனி தனியாருக்கு பல்வேறு திட்டங்களில் வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல் கிடைத்தது. அவற்றுள் விண்வெளித் திட்டங்களில் தனியாருக்கு வாய்ப்பு வழங்க உள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

அதன்படி விண்வெளித் திட்டங்கள் தனியார் துறை நிறுவனங்களுக்கு அரசு வாய்ப்பு அளித்துள்ளதாக ராம்நாத் கோவிந்த் தகவல் அளித்துள்ளார். ஆளில்லா வான்வெளி வாகனமான ட்ரோன் தொழில்நுட்பத்தில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று ஜனாதிபதி கூறினார்.

தனியார் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ட்ரோன் தொடர்பான விதிமுறைகளை அரசு எளிமைப் படுத்தி உள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார். நாடு முழுவதும் தொழில்நுட்பத்தின் வாயிலாக பயன்பெற அரசு வழிவகை செய்ய உள்ளது என்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

இந்தியா தன்னிறைவு பெறும் நோக்கில் அரசு திட்டங்களை தீட்டியுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார். ராணுவ தளவாடங்களை இந்தியாவில் தயாரிப்புக்கான அனுமதியை ஒன்றிய அரசு அளித்துள்ளது என்றும் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

இந்திய ராணுவ வீரர்களுக்கு விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார். தேஜாஸ் போர் விமான தயாரிப்புக்கு அரசின் அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக குடியரசு தலைவர் பேசினார். தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது என்றும் ஜனாதிபதி கூறினார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top