Connect with us

செல்வ வரி வழக்கு-ஜெயலலிதா வாரிசுகளுக்கு செக்! தீபா, தீபக் பதிலளிக்க ஆணை

deepa deepak

தமிழகம்

செல்வ வரி வழக்கு-ஜெயலலிதா வாரிசுகளுக்கு செக்! தீபா, தீபக் பதிலளிக்க ஆணை

செல்வ வரி வழக்கு-ஜெயலலிதா வாரிசுகளுக்கு செக்! தீபா, தீபக் பதிலளிக்க ஆணை

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அவைகள் இன்றளவும் நடைமுறையில் தான் உள்ளது. இந்த நிலையில் அவர் தன்னை செல்வ வரி வழக்கிலிருந்து விடுவிக்க மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் அவரது வாரிசுகளாக கருதப்படும் தீபா, தீபக் ஆகியோருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி செல்வ வரி வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் பதிலளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் சேர்ப்பது குறித்து பதிலளிக்க அறிவிக்கப்பட்டுள்ள தீபக், தீபாவுக்கு அவகாசம் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2008-2009 ஆம் ஆண்டுக்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐடி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அவரை விடுவித்தது. விடுவிக்கப்பட்டதை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வருமானவரித்துறை தாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளது பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று தீபா தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top