Connect with us

அரசு சொன்ன நோக்கங்களுக்கு ஏற்ப இல்லம் தேடி கல்வித் திட்டம் இருந்தா, நாங்க முழு சப்போர்ட் பண்ண ரெடி!!

முத்தரசன்

News

அரசு சொன்ன நோக்கங்களுக்கு ஏற்ப இல்லம் தேடி கல்வித் திட்டம் இருந்தா, நாங்க முழு சப்போர்ட் பண்ண ரெடி!!

அரசு சொன்ன நோக்கங்களுக்கு ஏற்ப இல்லம் தேடி கல்வித் திட்டம் இருந்தா, நாங்க முழு சப்போர்ட் பண்ண ரெடி!!

சில நாட்களுக்கு முன்பு நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் விளக்கமளித்தார். இந்த நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு சாதகமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.இல்லம் தேடி கல்வி

அதோடு மட்டுமல்லாமல் பல  எச்சரிக்கையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. அதன்படி இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் மதவாதத்தை தூண்டும் சக்திகள் ஊடுருவும் அபாயம் உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.

இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை விளக்கி தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை மதிப்பு மிக்கது என்று முத்தரசன் கூறினார்.

இல்லம் தேடி கல்வித்திட்டத்தை சங்கப் பரிவார் குழப்பம் ஊடுருவி பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சை விதைக்கும் அபாயம் ஏற்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த போவதில்லை என முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

மாநில கல்வி கொள்கையை வகுத்திட கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று கூறினார். அரசுப் பள்ளிகளில் கூடுதலாக ஒரு லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நோக்கி அரசு செயல்படும் என்பது வரவேற்கத்தக்கது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

அரசின் உன்னத நோக்கங்களுக்கு ஏற்ப இல்லம் தேடி கல்வித்திட்டம் செயல்படுத்தினால் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top