
தமிழகம்
தமிழகத்தை மதவாத சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவோம்-ஸ்டாலின்;
இன்று சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூறினார்.
அதோடு மட்டுமில்லாமல் அன்றைய தினம் பல்வேறு விதமான நலத்திட்டங்களை வழங்க வேண்டுமென்றும் அறிவித்தார். இந்த நிலையில் அந்த கூட்டத்தில் மதவாத சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சமூக நீதி மதநல்லிணக்கம் செழித்து சிறந்து இருப்பதை பொறுக்க முடியாமல் மதவாத நச்சு விதைகளை தூவ முயற்சி செய்து கொண்டு வருவதாகவும் கூறினார். மதவாத நச்சு விதைகளைத் தூவ எத்தனைக்கும் தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ் நாட்டை பாதுகாக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.
மேலும் அபாயகர சக்திகள், அவர்களுக்கு துணை போகும் அடிமைகள். விலைபோகும் வீணர்களை அடையாளம் காட்டுவோம் என்றும் கூறினார். தமிழகத்தை சேதாரம் இன்றி காக்கும் பட்டாளத்து சிப்பாய்கள் உருவாக்க திராவிட மாடல் பயிற்சி பாசறை உருவாக்கப்படும் என்றும் கூறினார்.
