Connect with us

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நாங்க தான் தயாரிப்போம்… அடம்பிடிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்…..!

kaithi 2

பொழுதுபோக்கு

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நாங்க தான் தயாரிப்போம்… அடம்பிடிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்…..!

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நாங்க தான் தயாரிப்போம்… அடம்பிடிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்…..!

நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் உண்டாவது போல சமீபகாலமாக சினிமாவில் புதிய கதைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது போல. அதனால் தான் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தையும், வேறு மொழியில் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்கையும் பலர் கையில் எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் பல படங்களின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி படம் தான். ஒரு கைதியின் வாழ்க்கையில் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மிகவும் அழகாக இயக்குனர் லோகேஷ் காட்சிப்படுத்தி இருப்பார்.

அதுமட்டுமின்றி படத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பு வேற லெவலில் இருக்கும். வழக்கமான தமிழ் படங்களுக்கு மத்தியில் கைதி படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக தமிழ் ரசிகர்களுக்கு இருந்தது. இதன் காரணமாக தமிழில் மிகப்பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற இப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் கைதி படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தொடங்கும் என பலர் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தில் பிசியாக இருப்பதால் அதை முடித்த பின்னரே இந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் விருப்பம் தெரிவித்துள்ளாராம். மேலும் இதற்காக படத்தின் இயக்குனர் லோகேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கைதி படத்தின் முதல் பாகத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பது தெரியவில்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top