Connect with us

தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம். சிறு குழந்தைகள் போல் அடம்பிடிக்கும் கனடா மக்கள்.. ரகசிய இடத்துக்கு தப்பிய பிரதமர்!

Untitled 138

செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம். சிறு குழந்தைகள் போல் அடம்பிடிக்கும் கனடா மக்கள்.. ரகசிய இடத்துக்கு தப்பிய பிரதமர்!

தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம். சிறு குழந்தைகள் போல் அடம்பிடிக்கும் கனடா மக்கள்.. ரகசிய இடத்துக்கு தப்பிய பிரதமர்!

கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளை வாட்டி வதைக்கி வருகின்றது.

கொரோனாவினைக் கட்டுக்குள் வைக்க மாஸ்க் அணிதல், ஊரடங்கு அமல் எனப் பல வழிகளையும் கடைபிடித்து வருகிறோம்.

அவற்றில் ஒன்றுதான் கொரோனாத் தடுப்பூசி செலுத்துவது. கொரோனாத் தடுப்பூசி போட்டால் கொரோனாத் தொற்று ஏற்படாமல் இருக்குமா? என்று கேட்டால் அப்படியே உறுதியாகச் சொல்ல முடியாது.

ஆனால் கொரோனாத் தொற்றின் வீரியம் குறைவாக இருக்கும். உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரொனாத் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வானது ஏற்படுத்தப்பட்டு கொரோனாத் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் துவக்கத்தில் கொரோனா தடுப்பூசியைப் போட மறுத்தநிலையில் தற்போது கொரோனாவை விரட்ட கிடைத்திருக்கும் ஒரே ஆப்ஷனாக எண்ணி தடுப்பூசியைப் போட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கனடாவிலும் கொரோனாத் தொற்றினைக் கட்டுக்குள் வைக்க தடுப்பூசியானது செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிற நாடுகளுக்கு சென்று வரும் சரக்கு வாகனங்களை ஓட்டும் ட்ரைவர்கக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்க ட்ரைவர்கள் போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொதுமக்கள் பாராளுமன்றத்தைச் சூழ்ந்துகொள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ரகசிய இடத்திள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top