அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம்..! பீதியில் உலக நாடுகள்..

ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அதிக அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சூழலில் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோன் என்று ரஷ்யா கூறியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 28 நாட்களாக நீடித்துள்ளது. துறைமுக நகரங்களான மரியூபோலில் இருந்து மக்கள் வெளியேறிய நிலையில் அந்நகரம் தற்போது சாம்பல் காடாக மாறியுள்ளது.

தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆலைகளில் ரஷ்யப் படைகள் கொத்துக்கொத்தாக குண்டுகளை வீசுகின்றனர். மிக சக்திவாய்ந்த குண்டுகளை மரியுபோலில் வீசி இருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த சூழலில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருக்கும் ரஷ்யா செய்தி தொடர்பாளர் தற்போது நடைபெற்று வரும் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் ரஷ்யா மற்றும் ரஷ்ய மக்களுக்கு அதிக அச்சுறுத்தல் ஏற்படுத்தும் போது அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என கூறியிருப்பது உலக நாடுகளிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment